இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். 14 வயதுடைய இளம்சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கு, கண்டறிவதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இன்றைக்கு எச்பிவி என்கின்ற ஒரு தடுப்பூசி ரூ.37 கோடி செலவில் போடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற வருவாய் மாவட்டங்களில் வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறிவதற்குரிய முழு பரிசோதனைகளையும் இன்னும் 10 நாட்களில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தொடங்கப்படவிருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் கிருஷ்ணகிரியிலும் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது” என்றார்.
The post அனைத்து வகை புற்றுநோய்களையும் கண்டறியும் பரிசோதனை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.