பெண்ணை கன்னத்தில் அறைந்த கிறிஸ்தவ மத போதகர்: வீடியோ வைரலானதால் பஞ்சாப் காவல்துறை விசாரணை

ஜலந்தர்: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சர்ச்சைக்குரிய பாதிரியார், ஒரு பெண்ணையும் ஆணையும் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் காவல்துறை விசாரித்து வருகிறது. பஞ்சாப்பில் உள்ள ஜலந்தரை சேர்ந்த கிறிஸ்தவ போதகர் பஜிந்தர் சிங்(42). இவர் ஜலந்தரில் தாஜ்பூர், மொகாலியில் மஜ்ரி ஆகிய இடங்களில் 2 சர்ச் நடத்தி வருகிறார். இவர் நடத்தும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு ஏராளமானவர்கள் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் யூடியூப்பில் நேரலை செய்யப்பட்டு வருகிறது. யூடியூப் சேனலை கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் பின்தொடருவதாக கூறப்படுகிறது. போதகர் பஜிந்தர் சிங் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என கடந்த மாதம் 28ம் தேதி ஒரு பெண் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

போதகருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க 3 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை காவல் துறை அமைத்துள்ளது.மேலும் பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம் புகார் அளித்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்,கடந்த 14ம்தேதி பஜிந்தர்சிங், ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவரது கன்னத்தில் அறைகிறார்.அதே போல் ஒரு ஆணையும் அவர் தாக்குகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்கில் வைரலாகியது. இந்த வீடியோ குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், வீடியோவில் வெளியான காட்சிகள் தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை. வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சம்பவம் நடந்த நேரம் ஆகியவை பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

The post பெண்ணை கன்னத்தில் அறைந்த கிறிஸ்தவ மத போதகர்: வீடியோ வைரலானதால் பஞ்சாப் காவல்துறை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: