ரிஷிவந்தியம் அருகே வனச்சரக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: ரூ.3.10 லட்சம் பறிமுதல்

ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பாவந்தூர் கிராமத்தில் தியாகதுருகம் வனச்சரக அலுவலகம் உள்ளது. இங்கு வனவர் செந்தில்குமார் குத்தகைதாரர்களிடம் லஞ்சம் கேட்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வனச்சரக அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வனவர் செந்தில்குமாரின் அறையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரிஷிவந்தியம் அருகே வனச்சரக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: ரூ.3.10 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: