கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டில்களை கொண்டு வந்த தனியார் பேருந்துக்கு அபதாரம் மட்டும் விதித்து தண்ணீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் விதமாக மலைப்பகுதிகளில் ஒரு லிட்டர் அரை லிட்டர் மற்றும் 2 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
மேலும் விதிகளை மீறி மலை பகுதிக்கும் நெகிழி பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அபதராம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் சோதனைசாவடி அமைத்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களைக் கொண்டு வரும் சுற்றுலா பயணிகள் மீது பசுமை வரியும் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தனியார் பேருந்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சென்ற நிலையில் அதனைக் கண்ட அதிகாரிகள் பசுமை வரியாக 1400 மட்டும் வசூலிக்கப்பட்டு தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்யாத நிலையில் இச்சம்பவம் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்று சம்பவத்திற்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
