சமூகநல்லிணக்கம் இல்லாத சூழல் நிலவுகிறது

கோவை: ஆர்யா, சித்தி இத்னானி நடித்துள்ள ‘காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ படம் வருகிற 2ம் தேதி வெளியாகிறது. படத்தை முத்தையா இயக்கி உள்ளார். பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் புரமோசனுக்காக படக்குழுவினர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ேகாவையில் ரசிகர்களை சந்தித்த ஆர்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இது ஒரு கமர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் படம். எனக்கு கிராமத்து ஆக்சன் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை.

அதனால் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டு கொண்டதால் இந்த கதை எனக்காக உருவாக்கப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு’ என்ற வசனம் இடம் பெற்றிருப்பது பற்றி கேட்கிறார்கள். மதநல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வரும் சமயத்தில், இதுபோன்ற வசனங்கள் தேவை என நினைக்கின்றேன். படத்தில் அந்த வசனம் வைத்ததற்கான நியாயமான காட்சிகள் இருக்கும். படத்தில் இடம்பெறும் ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டர் மற்றும் பாடல் ஆகியவை உற்சாகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கும், அதற்கும் தொடர்பு இல்லை.

பான் இந்தியா படங்கள் என்று தனியாக எதுவும் இல்லை. ஒரு படம் ஓடிடியில் வெளியாகும்போது அது பல மொழிகளில் வெளியிடப்படும். அப்போது படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அது பான் இந்தியா படமா என்று தீர்மானிக்கப்படும். அடுத்து ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சார்பட்டா பரம்பரை 2 படத்துக்கான கதை உருவாக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும். என்றார்.

The post சமூகநல்லிணக்கம் இல்லாத சூழல் நிலவுகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: