இந்நிலையில், அதிகமான தொகைக்கு ஒப்பந்த போடப்பட்டுள்ள Booz Allen, Accenture உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை இம்மாத இறுதிக்குள் குறைக்க வேண்டும் என டிரம்ப் அரசு பொது சேவைகள் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு வழங்கும் சேவைகள் ஆலோசனைகள் என்ன?, அவ்வற்றிற்கு விதிக்கப்படும் கட்டணத்திற்கான விளக்கம் மற்றும் கட்டணங்களைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எச்சரிக்கப்பட்டுள்ள Accenture நிறுவனம் அமெரிக்காவில் ஈட்டும் அதன் மொத்த வருமானத்தில் அரசின் பணி ஒப்பந்தங்கள் மூலம் மட்டும் 16% வருவாய் பெறுகிறது. டிரம்ப் அரசு பதவியேற்ற பிறகு அரசு ஒப்பந்த பணிகள் குறையும் என தகவலால் அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடும் சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஒப்பந்த நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் திடீர் நெருக்கடி: 1700 நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் அதிரடியாக ரத்து! appeared first on Dinakaran.