இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். திடீரென வீடுகள் குலுங்கியதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன என்றும், இதனால் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் முதலில் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானதாக கூறிய தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம், பின்னர் அதனை மறுத்தது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஏற்கனவே நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.
The post நியூசிலாந்தின் தென்மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! appeared first on Dinakaran.