மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி சுமார் 27000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 43,330 ஏக்கர் எரிந்து நாசமாகி உள்ளது. பழங்கால புத்த கோயில், வீடுகள், தொழிற்சாலைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்டமைப்புக்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் காட்டுத்தீக்கு இரையாகி உள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த காட்டுத்தீ மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனிடையே இரவு முழுவதும் பலத்த காற்று வீசியதால் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் தாமதம் நிலவி வருகின்றது. 130 ஹெலிகாப்டர், 4650 தீயணைப்பு வீரர்கள் உட்பட ஏராளமானோர் காட்டுத்தியை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post தென்கொரியாவில் காட்டுத்தீயில் 24 பேர் பலி, 27000 பேர் வெளியேற்றம் appeared first on Dinakaran.