தஞ்சாவூர், மார்ச்24: தஞ்சாவூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வெளியூர் பஸ்களை அண்ணா நகர் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர் மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்தும் அவ்வப்போது நகரின் முக்கிய இடங்களில் வாகன நெரிசலால் போக்கவரத்து பாதிக்கப்படுகிறது. அதன்படி, ராமநாதன் பஸ் நிறுத்தத்தில் இருந்து மேரீஸ் கார்னர் வரை காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைகின்றனர். இதனை தவிர்க்க தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களை புறவழிச் சாலை வழியாகவும், சாதாரண பஸ்களை யாகப்பா நகர், அண்ணா நகர், நாஞ்சிக்கோட்டை சாலை வழியாகவும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post போக்குவரத்து நெரிசலை குறைக்க வௌியூர் பேருந்துகளை மாற்று பாதையில் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.