நிவாரண உதவிகள் பெற்றிட மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் விவரங்களை பதிவு செய்ய அழைப்பு

 

திருவாரூர், மார்ச் 24: திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் உறுப்பினர்கள் வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் மென்பொருளில் பதிவேற்றம் செய்து ஸ்மார்ட் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தினால் வழங்கப்படும் நிவாரணம், உதவித்தொகை திட்டங்களில் பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் இதுவரை மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டிருந்தால் உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது முத்துப்பேட்டையில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார் ஆய்வாளர் அலுவலகத்தில் வரும் 31ம தேதிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். மேலும் 04366 290420 என்ற தொலைபேசியை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

The post நிவாரண உதவிகள் பெற்றிட மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் விவரங்களை பதிவு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: