வாடிப்பட்டி அருகே பரிதாபம் குடிநீர் தொட்டிக்குள் விழுந்த சிறுவன் பலி

வாடிப்பட்டி, மார்ச் 24: வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகன் சிவா வயது (32). கட்டிட தொழிலாளியான இவரது மகன்கள் சிவ சாய்குமார் (6) மற்றும் சிவ கார்த்திக் (4). இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கோயிலில் நடைபெறும் திருவிழாவிற்கு, சிவா மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகியோர் மட்டும் நேற்று குழந்தைகளை விட்டுவிட்டு சென்றிருந்தனர். இதனால் வீட்டில் சிறுவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் முன்பாக உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் சிவகார்த்திக் தவறி விழுந்துள்ளார். இதனை கவனிக்காத சிவசாய்குமார் வேறு பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதற்கிடையே கோயிலில் இருந்து திரும்பி வந்த பெற்றோர் தேடியபோது, அவர்களின் இளைய மகன் தண்ணீர் தொட்டியில் கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், சிறுவனை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் வாடிப்பட்டி போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் தரப்பட்டதுடன், சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி டாக்டர்கள் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post வாடிப்பட்டி அருகே பரிதாபம் குடிநீர் தொட்டிக்குள் விழுந்த சிறுவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: