பென்னாகரம், மார்ச் 23: பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடிக்கடி சுற்றுலாப் பயணிகள் ஆழமான பகுதிகளுக்கும், சுழல் மிகுந்த பகுதிகளுக்கும் சென்று உயிரிழக்கின்றனர். உயிரிழப்பை தடுக்கும் விதமாக கலெக்டர் சதீஸ் உத்தரவின்பேரில், காவிரியில் ஆழம் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை நேற்று பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) சுருளிநாதன், ஷகிலா (கிராம ஊராட்சி) ஆகியோர் ஆலம்பாடி முதலை பண்ணை, மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை, தொங்கு பாலம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளை நேரில் பார்வையிட்டனர். அப்போது, கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
The post ஆழமான பகுதிகளில் எச்சரிக்கை பலகை appeared first on Dinakaran.