அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்திட தொழில் முனைவோருக்கு அழைப்பு: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில்முனைவோர்களை உருவாக்கிடவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு 2021-2022ம் நிதியாண்டில் இருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தீவனம், தீவனபயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர்கள் https://nlm.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான விரிவான திட்ட அறிக்கையினை விண்ணப்பதாரர்கள் //www.tnlda.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்திட தொழில் முனைவோருக்கு அழைப்பு: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: