கோவில்பட்டி, மார்ச் 22: தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோரம்பள்ளத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜவகர் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மோகன், பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் காஞ்சி பன்னீர்செல்வம் பங்கேற்று பூத் கமிட்டி நிர்வாகிகளை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் பிரதீப், கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, நிர்வாகிகள் தங்கத்துரை, செல்வவிக்னேஷ், முருகன், கிளை செயலாளர்கள் ஆத்தி, ஆனந்தசேகர், செல்லத்துரை, அந்தோனிராஜ், ராஜசேகர், அல்பர்ட், அலெக்சாண்டர் எட்வர்ட், டென்னிஸ், பாசறை நிர்வாகிகள் சூரியா, புவனேஸ்குமார், ராகுல், அம்பானி, பாலாஜி, அருண்குமார் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கோரம்பள்ளத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
