அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து

சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். கடந்த 2021 மார்ச் 27ம் தேதி, தொகுதியில் உள்ள கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் ராஜகண்ணப்பன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேர்தல் விதிகளை மீறி, திமுக கொடி கம்பங்களை நட்டு, தோரணங்கள் கட்டி பிரச்சாரம் செய்ததாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். திருச்சி திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜுக்கு எதிரான கொரோனா விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Related Stories: