முறைகேடு புகார்.. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் அதிரடி!!

டெல்லி: முறைகேடு புகார் எதிரொலியாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் அண்மையில் திடெீரன்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது யஷ்வந்தர் வர்மா வீட்டில் இல்லை. இருப்பினும் யஷ்வந்த் வர்மாவின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர். அப்போது வீட்டில் உள்ள பல்வேறு அறைகளில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டன. இதனை தீயணைப்பு துறையினர் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தனர். இந்த தகவல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற கொலிஜியம் உறுப்பினர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் கொலீஜியம் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் இப்பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இருப்பினும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு ஆளாகியுள்ள நீதிபதியை, பதவி விலக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நீதிபதிகள் கொலீஜியத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

The post முறைகேடு புகார்.. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் அதிரடி!! appeared first on Dinakaran.

Related Stories: