குடியரசு தின விழாவில் பங்கேற்க நீலகிரி தேயிலை தோட்ட பெண் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட சளிவயல் மில்லிகுன்னு பகுதியில் வசிப்பவர் இந்திராணி (56). கூலித் தொழிலாளியான இவரது கணவர் ராஜேந்திரன் 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்திராணி அங்குள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் தினக் கூலியாக பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்திய ஜனாதிபதியிடமிருந்து வந்த அழைப்பை தபால் துறையினர் தேயிலை பறித்துக் கொண்டிருந்த அவரிடம் நேரில் சென்று வழங்கினர்.

திடீரென வந்த அழைப்பால் இந்திராணி மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போய் உள்ளார். இதுகுறித்து இந்திராணி கூறுகையில், ‘நான் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒன்றை கட்டினேன். இதுபற்றி கடந்த மாதம் அதிகாரிகள் சிலர் என்னிடம் வந்து விசாரித்து சென்றனர். நான் எந்தவிதமான அரிய செயல்களையும் செய்யவில்லை. எனக்கு கிடைத்துள்ள இந்த அழைப்பு மகிழ்ச்சியும் அதே நேரத்தில் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது’ என தெரிவித்தார்.

Related Stories: