செல்பி, வங்கி கணக்கு சரிபார்த்தல் கிரிப்டோ வாடிக்கையாளர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவிப்பு

புதுடெல்லி: கிரிப்டோ கரன்சி முதலீட்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய நிதி புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, கிரிப்டோ வாடிக்கையாளர் கேஒய்சி பூர்த்தி செய்யும்போது, தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்கும் வகையில் செல்பி எடுத்து சமர்ப்பிக்க வேண்டும். கிரிப்டோ கணக்குடன் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். ஆண்டுதோறும் தானாகவே சந்தா கட்டுவதற்கு சில இணையதளங்களில் கிரெடிட்கார்டை இணைக்க ஒரு ரூபாய் செலுத்த வேண்டி வரும். இதே நடைமுறையில் தான் வங்கிக் கணக்கில் இருந்து கிரிப்டோ கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்து இணைக்க வேண்டும். அவர் வசிக்கும் இடத்தை அட்சரேகை தீர்க்க ரேகை விவரத்துடன் பதிவு செய்ய வேண்டும். இதுபோல், பான் நம்பர், மொபைல் எண் சரிபார்ப்பு, ஆதார் அட்டை போன்றவையும் இதில் அடங்கும்.

Related Stories: