இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், நீங்கள் கூறிய இந்த தொழில்நுட்ப கல்லூரியை பொறுத்த அளவில் தொடர் செலவு, தொடரா செலவு என்று இரு வகையாக பிரிக்கப்பட வேண்டியுள்ளது. தொடரா செலவு சுமார் 14 கோடி ரூபாய் வருகின்றது. நீங்கள் அந்த கேள்வியை கேட்டவுடன் குறிப்புகளை கேட்டேன். தொடர் செலவு என்று பார்த்தால் ஆண்டிற்கு இரண்டரை கோடி ரூபாய் வருகின்றது. மருதமலை திருக்கோயில் ஏற்கனவே 37 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வரைவு பணிகளை எடுத்திருக்கின்றோம்.
உலகமே அதிசயிக்கின்ற வகையில் அங்கே முருகனுக்கு ஒரு பிரம்மாண்ட சிலை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கின்றார். இது போன்ற பணிகளுக்கு நிதி ஆதாரம் தேவைப்படுவதால், நீங்கள் வைத்த கோரிக்கையை மறுக்க மாட்டோம். வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக நிறைவேற்றுவதற்குண்டான சாத்திய கூறுகளை ஆராய்ந்து முயற்சிப்போம். நேற்று கோபமாக இருந்த அம்மன் அர்ஜுனனுக்கு இன்று குளுமையான பதிலை தருகிறேன்” என்று தெரிவித்தார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
The post கோபமாக இருந்த அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு குளுமையான பதிலை தருகிறேன்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சால் அவையில் சிரிப்பலை appeared first on Dinakaran.