சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பேட்டி

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பேட்டி: சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு உரிமை உள்ளபோது, அந்த உரிமை தற்போது மறுக்கப்படுகிறது. நேற்றைய சட்டப்பேரவையில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஜாகிர் உசேன் படுகொலை சம்பவம் குறித்து பேசியபோது, இனி தமிழகத்தில் கொலை சம்பவங்கள் நடைபெறாது. அதற்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் விளக்கம் அளித்தார்

அன்றே, ஈரோடு, சேலம், மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் நான்கு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த கொலை சம்பவங்கள் குறித்து பேரவையில் பேசுவதற்கு அவை தலைவர் அனுமதி தரவில்லை. தொகுதி மறு வரையறை செய்வது குறித்து நாடாளுமன்றத்தில்தான் அழுத்தம் தர வேண்டுமே தவிர, வெளியில் இருந்து ஆலோசனை நடத்துவது எவ்விதத்திலும் பயன் தராது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மறைக்கவே தொகுதி மறு வரையறை விவகாரத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: