சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் மாணவர்கள் அடையும் பயன்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு: ஆழ்ந்த திட்டமிடல் என்பது உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு நிற்பதில்லை. நாம் நினைத்துப் பார்க்காத வழிகளில் சமூக மாற்றத்துக்கே வித்திடுகின்றன. பள்ளி மாணவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதையும், தீவிர உடல்நலக் குறைபாடுகளையும் காலை உணவுத் திட்டம் பெருமளவில் குறைத்துள்ளதோடு வகுப்பில் கவனம், நினைவாற்றல், கற்றல் வெளிப்பாடுகளை மேம்படுத்தியுள்ளது ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு நல்ல ஊட்டச்சத்தைப் பெறும் குழந்தை பள்ளியில் சிறப்பாகப் படித்து, அது சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது. பெண்களுக்குக் கல்வியின் மூலம் அதிகாரமளித்து, அதனால் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தி, பாலின இடைவெளியையும் குறைத்துச் சாதித்த மாநிலம் தமிழ்நாடு. அதே தொலைநோக்கு அணுகுமுறையைத் தொடரும் வகையில் நேர்த்தியான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
The post காலை உணவுத் திட்டம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வழிகளில் சமூக மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளப் பதிவு appeared first on Dinakaran.