அவருடன் உடலுறவு கொள்ள ஒரு நாளைக்கு ரூ.5,000 பணம் வேண்டும் என்று கேட்கிறார். எனது அந்தரங்க உறுப்பை காயப்படுத்த முயற்சித்திருக்கிறார். தற்கொலைக்கு நான் தான் காரணம் என்று கூறி கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொள்வதாக என்னை மிரட்டினார். என் மனைவியும், அவரது தாயாரும் வாங்கிய வீட்டிற்கு மாதம் ரூ.75,000 கடன் தவணையை செலுத்துமாறு என்னை கட்டாயப்படுத்தி மிரட்டுகின்றனர். நான் வீட்டிலிருந்து பணிபுரிந்தபோது, அலுவலக வீடியோ காலில் இருந்தபோது வேண்டுமென்றே என்னுடன் வாக்குவாதம் செய்து கத்துவது, நடனம் ஆடுவது என அத்துமீறி அவர் நடந்துகொண்டதால் நான் வேலையை இழந்தேன்.
அதை நான் வீடியோவாக எடுத்து ஆதாரமாக வைத்துள்ளேன். இனி அவருடன் வாழமுடியாது என்று விவாகரத்து கேட்டால், மனைவி பிந்துஸ்ரீ ரூ.45 லட்சம் பணம் கேட்டதாகவும் அந்த புகாரில் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஸ்ரீகாந்தின் மனைவி பிந்துஸ்ரீ-யும் கணவர் ஸ்ரீகாந்த் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தன்னை பணிப்பெண் போல நடத்தி அடித்து துன்புறுத்தியதாகவும், வரதட்சணை கொடுமை செய்ததாகவும் பிந்துஸ்ரீ கூறியுள்ளார். மேலும், படுக்கையறையில் கேமரா வைக்குமாறு ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் வலியுறுத்தியதாகவும், கர்ப்பமாக்கிவிட்டால் எங்கும் செல்லமாட்டாள் என்று கணவரின் சகோதரர் அவருக்கு ஐடியா கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இரு தரப்பினரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
The post உடலுறவு கொள்ள தினமும் ரூ.5,000 கேட்கும் மனைவி: கணவன் போலீசில் புகார் appeared first on Dinakaran.