அதில், “பிப்ரவரி 5 2025ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குறிப்பாக பெண்கள் நடத்தப்பட்ட விதம் பற்றி இந்தியா அமெரிக்க அதிகாரிகளிடம் தன் வேதனையை வலுவாக பதிவு செய்துள்ளது. மேலும் பிப்ரவரி 5, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பஞ்சாபில் தரையிறங்கிய 3 நாடு கடத்தல் விமானங்களில் இருந்த இந்தியர்கள் எந்தவொரு மதரீதியான தலைகவசங்களை அகற்றுமாறு வலியுறுத்தப்படவில்லை.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் சைவ உணவு கோரியதை தவிர வேறெந்த மதரீதியிலான கோரிக்கையையும் கேட்வில்லை என ஒன்றிய வௌியுறவு அமைச்சகத்துக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இந்தியர்களின் மத உணர்வுகள், உணவு விருப்பங்கள் ஆகியவற்றை அமெரிக்கா பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்தியா தெரிவித்துள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.
The post அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது பற்றி இந்தியா வேதனையை பதிவு செய்துள்ளது: ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.