மும்மொழி கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு இந்திய மொழியும் நாட்டிற்கு ஒரு பொக்கிஷமாகும். இந்தி எந்த மொழியுடனும் போட்டியிடவில்லை. அது மற்ற மொழிகளின் நண்பன் மட்டுமே. உள்துறை அமைச்சகத்தில் இந்திய மொழிகளுக்கான ஒரு புதிய பிரிவு நிறுவப்பட்டுள்ளது. மொழியின் பெயரால் நாட்டை பிரிப்பதற்கு விரும்புவோருக்கு எந்த காரணமும் கிடைக்காமல் இருப்பதற்காக நான் இதனை கூற விரும்புகிறேன்.
தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, அசாமி என அனைத்து மொழிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மொழி பெயர்ப்புக்களுக்கான பயன்பாடுகளும் இருக்கும்” என்றார். தீவிரவாதத்தை அரசு சகித்துக்கொள்ளாது: மாநிலங்களவையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி தலைமையிலான அரசானது தீவிரவாதத்தை சகித்துக்கொள்ளாது என்ற கொள்கையை கொண்டுள்ளது.
மார்ச் 2026ம் ஆண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும்” என்றார். டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்: மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, ‘‘ இந்தியா முழுமையான டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை மிக விரைவில் பெறும். நாங்கள் 6 சோதனைகளை மேற்கொண்டுள்ளோம். மேலும் ஆறு மாதங்களுக்குள் மேக் இன் இந்தியாவின் அடையாளமாக உள்நாட்டு டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் உருவாக்கப்படும்” என்றார்.
The post இந்தி எந்த மொழிக்கும் போட்டியில்லை: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு appeared first on Dinakaran.