மூத்த ஐஏஎஸ் அதிகாரி துணை தேர்தல் ஆணையாளராக மதுப் வியாஸ் நியமனம்

புதுடெல்லி: மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை ஒன்றிய அரசு நேற்று இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அருணாச்சல் பிரதேசம்,கோவா மற்றும் மிசோரம் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி மதுப் வியாஸ் துணை தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். பிரசன்னா.ஆர் மற்றும் சுஷ்மா சவுகான் உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்களாகவும், இந்திய பொருளாதார சேவை (ஐஇஎஸ்) அதிகாரி கமலாகாந்த் திரிபாதி பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post மூத்த ஐஏஎஸ் அதிகாரி துணை தேர்தல் ஆணையாளராக மதுப் வியாஸ் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: