பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று தொடர்ந்தது. ஒன்றிய முன்னாள் அமைச்சரும் விஜயபுரா எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல் யத்னால், முன்னாள் அமைச்சர் சுனில்குமார் உள்ளிட்டோர் அழகிகளை அனுப்பி அமைச்சர் ராஜண்ணாவை மயக்க முயற்சி நடந்துள்ளது என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜண்ணா கூறுகையில்,என் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளதால் இது தொடர்பாக விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அழகிகளின் வலையில் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றது உண்மை தான். அதே நேரம் இதை பற்றி நான் கவலைப்படவில்லை. 48 எம்எல்ஏக்களின் இது போன்ற ஆபாச வீடியோ சிடிக்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பலருக்கும் அழகிகள் மூலம் வலை விரிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களும் சிக்கியுள்ளனர். இதுகுறித்து உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்கப்படும். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர், ‘‘அமைச்சர் கேஎன் ராஜண்ணா புகார் அளிப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஹனிடிராப் குறித்து விசாரணை நடத்தப்படும். உறுப்பினர்கள் சுனில்குமார், முனிரத்னா, யத்னால் உள்ளிட்ட உறுப்பினர்களின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் உயர் மட்ட விசாரணை நடத்தி ஆபாச சிடி தொடர்பான உண்மைகள் 100 சதவீதம் வெளியே கொண்டு வரப்படும்’’ என்றார்.
The post அழகிகள் வலையில் சிக்கிய 48 எம்எல்ஏக்களின் ஆபாச வீடியோ: கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.