கொடைக்கானல் வனக்கோட்டத்திற்குட்பட்ட 27 பகுதிகளில் 27 குழுவினராக கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீர் நிலை பறவைகள், நில பறவைகள் குறித்தும் மற்றும் இரவு நேர பறவைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்படி கொடைக்கானல் வனப்பகுதிகளில் 200 வகையான பறவை இனங்கள் உள்ளதும், கொடைக்கானல் மலைப்பகுதியில் 3,500க்கும் மேற்பட்ட பறவைகள் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. வேறு எந்த மலைப்பகுதிகளிலும் இல்லாத அரிய பறவை இனங்களான கிரே ஹெட்டட் கென்னறி, பிளை கேட்சிங், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்சிங், யுரேஷியன் பிளாக் பேர், கமிட்டர் வாபுலர், நீலகிரி பிளை கேட்சிங், ஓரியண்டல் ஒயிட் ஐ, பழனி லாபிங் திரஸ், பார்விங் பிளை கேட்சர், ஸ்டிக்கில்டு ப்ளூ பிளை கேட்ச்சர், ரஸ்டி டைல்டு பிளைட் கேட்ச்சர் உள்ளிட்ட 25 அரிய வகை பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் மனோஜ்குமார் கூறுகையில், ‘‘கொடைக்கானல் வனப்பகுதியில் பறவை இன பெருக்கம் நன்றாக உள்ளது. அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாப்பதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.
The post கொடைக்கானல் வனப்பகுதியில் 25 அரிய வகை பறவைகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.