தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 3% சதவீதம் குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பான நிலையில் 440 மி.மீ. மழை பொழியும் நிலையில் தற்போது வரை 427 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 10% சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 809 மி.மீ. மழை பொழியும் நிலையில் தற்போது வரை 724 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை கணக்கீடு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் பருவமழை குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 95% சதவீதம் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்துள்ளது.

குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 35% சதவீதம் இயல்பை விட குறைவாக பருவமழை பெய்துள்ளது. 10 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 27 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் பருவமழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு இயல்பை விட கூடுதலாக பெய்யும் என்று வானிலை மையம் கணித்திருந்த நிலையில் குறைவாக பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 24%சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23% சதவீதமும், கரூரில் 28% சதவீதமும் பருவமழை குறைவாக பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 30 சதவீதம், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூரில் 26%சதவீதம், திருச்சி மாவட்டத்தில் 21%சதவீதம் பருவமழை குறைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: