அப்போது சந்தேகத்தின் பேரில் 2 இளம்பெண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் ஒருவர் மாடல் அழகி.
இன்னொருவர் மேக்கப் கலைஞர். பாங்காக்கில் இருந்து மேக்கப் பொருட்களை வாங்கி வருவதாக 2 பேரும் கூறினர். ஆனாலும் அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் 2 பேரின் பேக்குகளில் தீவிர பரிசோதனை நடத்தினர். இதில் மேக்கப் பொருட்களுக்கு இடையே 15 கிலோ கலப்பின கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ. 4.5 கோடியாகும். இதையடுத்து விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரயும் அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். இதில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாடல் அழகியான மான்வி சவுத்ரி என்பது தெரியவந்தது.
இன்னொருவர் டெல்லியை சேர்ந்த மேக்கப் கலைஞரான சிப்பெத் ஸ்வாந்தி என்றும் தெரியவந்தது. தொடர் விசாரணைக்குப் பிறகு 2 பேரும் கொச்சி நெடும்பாசேரி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் யாருக்காக கஞ்சாவை கடத்தி வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பும் இதே போல பாங்காக்கில் இருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பின கஞ்சா கடத்திய மும்பையைச் சேர்ந்த சபா ராஷித் மற்றும் ஷசியா அமர் என்ற 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு; ரூ.4.5 கோடி கஞ்சா பறிமுதல்: மாடல் அழகி உள்பட 2பெண்கள் கைது appeared first on Dinakaran.