இந்நிலையில், மாநில ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டுக்கு முன், இரண்டு இடங்களிலும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி துவங்கியது. இதில், 30 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலம், 100 மீட்டர் நீளமுள்ள அணுகு சாலை பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள பாலம் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. ஆனால், பச்சாம்பாளையம் பிரிவில் கட்டப்பட்டு வரும் பாலம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. உயர்மட்ட பாலம் துவங்கி இரண்டு மாதத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டு 50 சதவீதம் பணி நிறைவடைந்ததும் நிறுத்தப்பட்டது.
அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, ஆதி ரெட்டியூர், சனி சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் தற்போது இந்த பாலம் கட்டும் பணி காரணமாக செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், சிறிய ரக வாகனங்கள் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் குண்டும், குழியுமான இடங்களை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பாலம் கட்டும் பணி சரிவர நடைபெறாமல் உள்ள நிலையில் பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் மேலிருந்து கீழ்நோக்கி விரிசல் ஏற்பட்டுள்ளது. பால பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பாலத்தின் பக்கவாட்டில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து விரைவில் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலத்தில் விரிசல்: சரி செய்து விரைவில் திறக்க கோரிக்கை appeared first on Dinakaran.