இந்நிலையில் கேரளாவில் சில வருடங்கள் ஓடிய, சேதமடைந்த நிலையில் இருந்த பழைய பெட்டிகள் தமிழ்நாட்டுக்கு தள்ளி விடப்பட்டு, கேரளாவுக்கு அந்த புதிய 20 பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. இது பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் 530 இருக்கைகளுடன் சராசரியாக ஒரு டிரிப்புக்கு ரூ.8.5 லட்சம் வருமானமும், 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் 1128 இருக்கைகளுடன் சராசரியாக டிரிப் ஒன்றுக்கு ரூ.18 லட்சம் வருமானமும், 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் 1,440 இருக்கைகளுடன் சராசரியாக டிரிப் ஒன்றுக்கு ரூ.23.50 லட்சம் வருமானமும் கிடைக்கும். எனவே தற்போது சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயில் பெட்டிகளை நெல்லை – சென்னை இடையே இயக்குவதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ரயில் பயணிகள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலாளர் ஜெகன் கூறுகையில், ‘‘புதிய 8 ரயில் பெட்டிகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில், பின்னர் 16 பெட்டிகளோடு இயக்கப்பட்டது. அப்போது கேரளாவில் ஓடிய பழைய 16 ரயில் பெட்டிகளை இங்கு ஒதுக்கீடு செய்துவிட்டனர். இது ஏற்புடையது அல்ல. எனவே தற்போது தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய 20 ரயில் பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலை நெல்லை – சென்னை இடையே இயக்கிட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளுடன் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பெட்டிகள் உள்ளன. நெல்லை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட பயணிகளுக்கு இந்த ரயில் வசதியாக இருக்கும். புதிய பெட்டிகள் என்றால் அவற்றை கேரளாவிற்கு அனுப்புவதும், அங்கிருந்து பழைய பெட்டிகளை தமிழ்நாட்டுக்கு திருப்பி விடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்’’ என்றார்.
The post வந்தே பாரத் ரயிலில் பழைய பெட்டிகள் தமிழ்நாட்டுக்கு புதியவை கேரளாவுக்கு ஒதுக்கீடு: ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை appeared first on Dinakaran.