விழுப்புரம், மார்ச் 20: விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாகர்ஷா வீதியில் உள்ள மசூதி அருகே தக்கா தெருவை சேர்ந்தவர் முகமது யாசீர்(32). இவர் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த இடத்தில் ஆட்டோவை காணவில்லை. யாரோ திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன் ரோந்து பிரிவு போலீசார் உள்ளிட்ட பணியில் இருந்தவர்களுக்கு ஆட்டோவின் பதிவெண் அனுப்பி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பனையபுரம் கூட்டு ரோடு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவின் பதிவெண்ணை மாற்றிக்கொண்டிருந்த நபரை விக்கிரவாண்டி ரோந்து போலீசார் பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து விசாரணையில் விழுப்புரம் மேல்தெருவை சேர்ந்த அப்பாஸ் மகன் பஷீர்(28) என்பது தெரியவந்தது. முகமது யாசீரின் ஆட்டோவை திருடிக்கொண்டு போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நம்பரை மாற்றியதும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஷீரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். திருட்டு போன ஆட்டோவை ஒரு மணிநேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு எஸ்பி சரவணன் பாராட்டுகளை தெரிவித்தார்.
The post விழுப்புரத்தில் தொழுகைக்கு சென்றபோது ஆட்ேடா திருடியவரை ஒரு மணி நேரத்தில் கைது செய்த போலீசார் எஸ்பி சரவணன் பாராட்டு appeared first on Dinakaran.
