ஐபிஎல்லில் சென்னையுடனான முதல் போட்டியில் விளையாட மும்பை கேப்டனுக்கு தடை: ஹர்திக்கிற்கு மாற்று சூர்யகுமார்

மும்பை: ஐபிஎல் போட்டியில், வரும் 23ம் தேதி சென்னையுடன் ஆடும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

சென்னையில் மார்ச் 23ம் தேதி நடைபெறும் இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சூரியகுமார் கேப்டன் பதவியை வகிப்பார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நேற்று அறிவித்தது. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை பந்து வீச தாமதப்படுத்தியதால் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் அடுத்து ஆடும் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அது அந்த தொடரின் கடைசி ஆட்டம் என்பதால், இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஹர்திக்கின் தண்டனை அமலுக்கு வருகிறது.

இது குறித்து மும்பை தலைமை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனா கூறுகையில், ‘ஹர்திக் முதல் ஆட்டத்தில் விளையாட முடியாது என்பது புதன்கிழமை (நேற்று)தான் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது’ என்றார். ஆனால் 2024 தொடரில் லக்னோவுக்கு எதிரான போட்டி முடிந்ததும் 17-05-2024ம் தேதியே அபராதம், தண்டனை அறிவிக்கப்பட்டு விட்டது. அப்போதே ‘அடுத்த (2025) தொடரின் முதல் ஆட்டத்தில் ஹர்திக் விளையாட முடியாது’ என்பதும் வைரலானது.

The post ஐபிஎல்லில் சென்னையுடனான முதல் போட்டியில் விளையாட மும்பை கேப்டனுக்கு தடை: ஹர்திக்கிற்கு மாற்று சூர்யகுமார் appeared first on Dinakaran.

Related Stories: