விருந்து படைக்க தயாராகும் ஐபிஎல்: தோனிக்காக காத்திருக்கும் முத்தான 3 சாதனைகள்.! 23ல் சென்னை – மும்பை மோதல்

சென்னை: ஐபிஎல்லில் மோதவுள்ள முக்கிய அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, 3 புதிய சாதனைகளை படைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தியாவில் ரசிகர்களின் பேராதரவுடன் ஆடப்படும் ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. வரும் 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை அணியின் முன்னாள் கேப்டனுமான தோனி பல்வேறு புதிய சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணிக்கு அதிக ரன் குவித்த வீரர்களில், 4687 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார்.

அவரை முந்தி முதலிடத்தை பிடிக்க தோனிக்கு இன்னும் 19 ரன்களே தேவை. இந்த தொடரில் தோனி ஒரே ஒரு அரை சதம் அடித்தாலும் மற்றொரு சாதனையை படைத்த வீரராக உருவெடுப்பார். ஐபிஎல்லில் அதிக வயதில் அரை சதம் எடுத்த வீரராக ஆஸ்திரேலியா வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (41 வயது 181 நாள்) திகழ்கிறார். தோனி, 1981ம் ஆண்டு ஜூலையில் பிறந்தவர் என்பதால் 44ம் வயதை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளார். தவிர, ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க தோனிக்கு இன்னும் 10 விக்கெட்டுகளே தேவை. இந்த 3 சாதனைகளையும் நடப்புத் தொடரில் தோனி படைப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

The post விருந்து படைக்க தயாராகும் ஐபிஎல்: தோனிக்காக காத்திருக்கும் முத்தான 3 சாதனைகள்.! 23ல் சென்னை – மும்பை மோதல் appeared first on Dinakaran.

Related Stories: