முன்கூட்டியே தேர்வை ஒத்திவைத்திருந்தால் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும் என தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். தொழில்நுட்பக் கோளாறு என்று மட்டுமே கூறி தேர்வை ரத்து செய்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டினர். அது மட்டுமல்லாமல், 2வது ஷிப்ட் தேர்வு நடைபெறுமா? ரத்தா? என்று குழப்பம் நீடிப்பதால் தேர்வர்கள் தவிர்ப்பிற்கு உள்ளாகி உள்ளனர். முன்னதாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்தது. தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்குமாறு ஒன்றிய அரசுக்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. ஆனால், வேறொரு தேர்வு நடப்பதால் தமிழ்நாட்டில் மையம் ஒதுக்க முடியாது என கூறியிருந்தது ரயில்வே தேர்வு வாரியம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆர்ஆர்பி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தெலுங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.
