சென்னை: ரோடு ஷோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5க்குள் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து விரைவில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஆட்சேபனைகள் இருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று தெரிவித்துள்ளது.
