சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘‘மழைக்காலங்களில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலப்பதால், தாமிரபரணி ஆற்றில் 4, 5 இடங்களில் தடுப்பணை அமைக்கர வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இந்த கோரிக்கை மிக முக்கியமானது. நம்மிடம் இருக்கும் ஒரே வற்றாத நதி தாமிரபரணி. உறுப்பினரின் அத்தியாவசியமான கோரிக்கை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்” என்றார்.
The post தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கு முன்னுரிமை: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.