18-65 வயது மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் : அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை : “மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுமா ?” என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன்,”2009-10 முதல், இரு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டு முதல் ஒருகால் பாதித்து, கைகள் நன்றாக இருக்கும் 18-65 வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது”என்றார்.

The post 18-65 வயது மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் : அமைச்சர் கீதா ஜீவன் appeared first on Dinakaran.

Related Stories: