ஓட்டப்பிடாரம், மார்ச் 19: விளாத்திகுளம் – வெள்ளாரம் அரசு டவுன் பஸ், கச்சேரிதளவாய்புரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனை யூனியன் முன்னாள் துணை சேர்மன் காசி விஸ்வநாதன் துவக்கி வைத்தார். விளாத்திகுளத்தில் இருந்து வெள்ளாரம் வரை வரும் அரசு டவுன் பஸ்சை, ஓட்டப்பிடாரம் அடுத்த கச்சேரிதளவாய்புரம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நடவடிக்கையின் பேரில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கச்சேரிதளவாய்புரம் வரை பஸ்சை நீட்டிப்பு செய்தனர். இதன் துவக்க விழாவிற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் முன்னாள் துணை சேர்மன் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்து வெள்ளாரத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் சாமி, பஞ். முன்னாள் தலைவர்கள் சேர்மன் பொன்செல்வி, முத்துக்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் புவிராஜ், ஒன்றிய விவசாய சங்க செயலாளர் செல்வராஜ், கிளை செயலாளர்கள் கனகராஜ், மோகன், சுடலைமணி, ரவிக்குமார், பெருமாள்சாமி, நிர்வாகிகள் மூர்த்தி, தம்பிரான், தொமுச கிருஷ்ணமூர்த்தி, அய்யாச்சாமி, மாரியப்பன், முத்துராஜ் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post விளாத்திகுளம் – வெள்ளாரம் பஸ் கச்சேரிதளவாய்புரம் வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.
