தொடர்ந்து, 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 51வது வார்டு கடப்பேரி அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் 56வது வார்டு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணி மற்றும் மங்கள் ஏரியில் ரூ.1.40 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
The post தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45.3 கோடியில் திட்ட பணிகள்: ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.
