இதன்பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது; வருங்கால தமிழகம், எதிர்காலம் மிகவும் சிறந்ததாக மக்களாட்சி மலரக்கூடிய வருடமாக 2026 அமைய வேண்டும் என்பது எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியாகும். என்னை பொறுத்தவரை பிறந்தநாள் விழாவை விழாவாகவே எடுத்துக்கொள்ளவில்லை. விஜயகாந்த் மறைந்ததற்கு பிறகு எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என்று பலமுறை கூறியிருக்கிறேன். தேமுதிக நிர்வாகிகள் எங்களுக்காக இதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியதால் இதை ஏற்று கொண்டேன். இவ்வாறு கூறினார்.
இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘’அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மக்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் சிறக்கவும் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
The post 2026ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும்: பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.