ஆலத்தூர் தாலுகாவில் ட்ரான்சிட் பாஸ் விண்ணப்பிக்காத 3 கிரஷருக்கு ‘சீல்’

 

பாடாலூர், மார்ச் 18: ஆலாத்தூர் தாலுகாவில் ட்ரான்சிட் பாஸ் விண்ணப்பிக்காத 3 கிரஷர்களுக்கு மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கிரசர் நிறுவனங்களில் விற்பனையில் முறைகேடு செய்து அரசுக்கு நிதி இழப்பை தடுக்கும் விதமாக கடந்த சில மாதங்களாக ட்ரான்சிட் பாஸ் எனும் நடை சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் பெறக்கூடிய இந்த நடை சீட்டு இல்லாமல் கிரசர் நிறுவனங்களிலிருந்து ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட எவ்வித பொருட்களையும் வெளியே எடுத்துச் செல்லக்கூடாது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிழக்கு, தெரணி, நாரணமங்கலம் ஆகிய 3 கிரசர் நிறுவனங்கள் ட்ரான்சிட் பாஸ் விண்ணப்பிக்காமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒரு வார கால அவகாசமளித்தும் நோட்டீஸுக்கு உரிய விளக்கமளிக்காததையடுத்து பெரம்பலூர் மாவட்ட கனிமம் மற்றும் சுரங்க துறை மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று அந்த 3 கிரஷர் நிறுவனங்களுக்கும் சீல் வைத்து மூடினர்.

The post ஆலத்தூர் தாலுகாவில் ட்ரான்சிட் பாஸ் விண்ணப்பிக்காத 3 கிரஷருக்கு ‘சீல்’ appeared first on Dinakaran.

Related Stories: