நீதிமன்ற உத்தரவு வடசேரி பெருமாள் குளம் ஏப்.8ல் அளவீடு

நாகர்கோவில், மார்ச் 18 :நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வடசேரி பெருமாள் கோயில் குளத்தை வருவாய் துறை வரும் 8ம் தேதி அளவீடு செய்கிறது. நாகர்கோவில் வடக்கு கிராமம் வடசேரி பெருமாள் கோயில் குளம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி அளந்து எல்கை நிர்ணயம் செய்திட அகஸ்தீஸ்வரம் தாசில்தார் முருகன் நாகர்கோவில் குறுவட்ட நில அளவர், நாகர்கோவில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், நாகர்கோவில் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு கடிதம் வழங்கியுள்ளார். அதன்பேரில் வரும் ஏப்ரல் 8ம் தேதி அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post நீதிமன்ற உத்தரவு வடசேரி பெருமாள் குளம் ஏப்.8ல் அளவீடு appeared first on Dinakaran.

Related Stories: