பிரேசிலியா: பிரேசில் கால்பந்தாட்ட அணியின் சூப்பர் ஸ்டார் நெய்மர் (33), காயம் காரணமாக, கொலம்பியா, அர்ஜென்டினா அணிகளுடனான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023 அக்டோபரில் உருகுவே அணிக்கு எதிரான ஒரு போட்டியின்போது பிரேசில் அணிக்காக ஆடிய நெய்மரின் இடது தொடையில் காயம் ஏற்பட்டது. அதன் பின் ஒன்றரை ஆண்டுகளாக அவர் எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. பின்னர், கடந்த ஜனவரியில் சான்டோஸ் அணியில் நெய்மர் மீண்டும் சேர்ந்தார். இருப்பினும் போட்டியின்போது அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், வரும் 20ம் தேதி கொலம்பியா அணியுடனும், 5 நாட்களுக்கு பின்னர் அர்ஜென்டினா அணியுடனும் பிரேசில் அணி, முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் மோதவுள்ளது. இப்போட்டிகளில் உடல் தகுதி பிரச்னை காரணமாக நெய்மர் இடம்பெற மாட்டார் என பிரேசில் கால்பந்தாட்ட சம்மேளனம் நேற்று முறைப்படி அறிவித்துள்ளது.
The post உலகக் கோப்பை தகுதிச் சுற்று நெய்மர் இல்லாத பிரேசில் appeared first on Dinakaran.