ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள தேசிங்கு ராஜா, ராணிபாய் நினைவு மண்டபத்தினை புனரமைக்கும் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த இடத்தினை புனரமைத்து பொதுமக்கள் பார்வையிடவும் ராணிப்பேட்டையின் வரலாற்று நினைவுச் சின்னமாக மாற்றிட கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முயற்சியால் சட்டமன்ற கூட்டத் தொடரில் பொதுப்பணித் துறையின் பட்ஜெட் அறிவிப்பில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் ராஜா, ராணி நினைவிடம் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பொதுப்பணித்துறை மற்றும் மரபு கட்டடங்கள் வட்டம் சார்பில் ராணிப்பேட்டை பாலாற்றங்கரை அமைந்துள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவு மண்டபத்தினை புனரமைக்கும் பணிக்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் முதற்கட்டமாக ராஜா, ராணி நினைவு மண்டபத்தின் மேற்பகுதியில் நடக்கும் புனரமைப்பு பணி, மண்டபத்தினை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் தேசிங்கு ராஜா, ராணிபாய் நினைவு மண்டபம் புனரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.