திருத்துறைப்பூண்டி, மார்ச் 15: தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலில்,நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டமன்றதில் தாக்கல் செய்தார். அதனை பொது மக்கள் பார்வையிடும் வகையில் நேரடி ஒளிபரப்புக்கு திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், ஆணையர் துர்கா, துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், நியமனக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியர், பொறியாளர் வசந்தன் ,மேலாளர், கார்த்திகேயன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அமைச்சர் உரையை நேரலையில் கண்டு கேட்டறிந்தனர்.
The post தமிழக அரசு பட்ஜெட் திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் நேரடி ஒளிபரப்பு appeared first on Dinakaran.
