கறம்பக்குடியில் கால்நடை மருத்துவ முகாம்

 

கறம்பக்குடி, மார்ச் 15: கறம்பக்குடி அருகே இன்னான் விடுதி கிராமத்தில் கால்நடை சுகாதார முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு ஊராட்சி இன்னான் விடுதி கிராமத்தில். மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் கால்நடை சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடை சுகாதார முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் அப்பாகுதியில் உள்ள கால்நடைகள் அனைத்திற்கும் சிகிச்சை மேற்கொள்ளுதல் குடர்புழு நீக்கம் செய்தல் பசு மாடுகளுக்கு மலட்டு நீக்கள் சிகிச்சை வெள்ளாடுகளுக்கு ஆண்மை நீக்கம் கோழிகளுக்கு தடுப்பூசி மற்றும் நாய்களுக்கு தடுப்பூசி ஆகிய மருத்துவ பணிகள் மேற்கொள்ளபட்டன.

தமிழ்நாடு அரசின் மருத்துவ கால்நடை முகாமில் 200 க்கு மேற்பட்ட கால்நடை களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்த கால்நடை மருத்துவ முகாமில் கால்நடை உதவி மருத்துவர் இதயத்துல்லா மருத்துவர் ரெங்கராஜ் சூர்யா, கால்நடை ஆய்வாளர்கள் காந்திமதி கவிஞன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சின்னையன் மற்றும் 1962 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கறம்பக்குடியில் கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: