திண்டிவனம், காஞ்சிபுரம், வேலூர் கோவை இடையே மண்டல ரயில்: சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதாக அமைச்சர் அறிவிப்பு

சென்னை: வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் ஆர்ஆர்டிஎஸ் ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார். ஆர்ஆர்டிஎஸ் ரயில் வழித்தடம்: சென்னை – திண்டிவனம் இடையே ஆர்ஆர்டிஎஸ் ரயில்கள் அமைக்கப்படும். சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் இடையே ஆர்ஆர்டிஎஸ் ரயில்கள் அமைக்கப்படும்.
கோயம்புத்தூர் – சேலம் இடையே ஆர்ஆர்டிஎஸ் ரயில்கள் அமைக்கப்படும்.

ஆர்ஆர்டிஎஸ் என்பது விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை ஆகும். ஆர்ஆர்டிஎஸ் என்பது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான திட்டமாகும். இது நகரங்கள் மற்றும் புறநகரங்களை இணைக்கும் வேக ரயில் போக்குவரத்து அமைப்பாகும். டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் முதன்முதலில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மெட்ரோ ரயில்களை விட வேகமாகவும், சாதாரண ரயில்களை விட நவீனமாகவும் இருக்கும்.

ஆர்ஆர்டிஎஸ்சின் முக்கிய அம்சங்கள்:மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கும். ஏசி கோச்சுகள், ஒய்-பை ஆட்டோமெட்டிக் கதவுகள். வேகமான பயணம், மெட்ரோவிற்கு மாற்றாக நீண்ட தூரப் பயணிகளுக்கு உகந்தது. மின்சாரத்தில் இயங்கும், குறைந்த கார்பன் அடையாளம். தற்போது இவை டெல்லி-மேரட், டெல்லி-அல்வார், டெல்லி-பானிபத் ஆகிய வழிகளில் முதலில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post திண்டிவனம், காஞ்சிபுரம், வேலூர் கோவை இடையே மண்டல ரயில்: சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதாக அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: