ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!

சென்னை : ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய StatueOfWisdom-இன் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்ததற்கிணங்க, ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள்! 38 மாவட்டங்களிலும் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள், தமிழோசை, அரசு ஊழியர் – ஆசிரியர் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு, வினாடி வினா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.இவற்றைத் ‘திருக்குறள் திருவிழா – தமிழர்களுக்குத் தெவிட்டாத பெருவிழா’ என்ற பெருமிதத்துடன் தொடங்கி வைத்தேன். வள்ளுவம் போற்றுதும்!,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: