சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 30ம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்றைய கூட்டம் முடிவடைந்தது. தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது. பிறகு சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட் நாளை (15ம் தேதி) காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்படும்.
தொடர்ந்து வரும் 17ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து 21ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுவார்கள். தொடர்ந்து வரும் 24ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஏப். 30 வரை சட்டப்பேரவை கூட்டம் appeared first on Dinakaran.